Advertisment

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதா?... ஆய்வுக்குப் பின் மத்தியக்குழு பதில்...!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மூவர் கண்காணிப்பு குழுவின் குழுத்தலைவர் குல்ஷன் ராஜ் தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும்.அதன்படி பணிகள் செய்யப்படும்.

Advertisment

MULLAI PERIYAR DAM REVIEW

இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ்சும் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு கடந்த ஜூன் 4ம்தேதி அணையில் ஆய்வு நடத்தியது. அதன்பின் நேற்று ஆய்வு செய்தது. அப்பொழுது மெயின் அணை பேபி அணை பகுதிகளை பார்வையிட்டனர்.

நீர்க்கசிவு காலரியில் தற்போது அணையின் நீர் மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு உள்ளதா என ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு சரியான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் இரண்டாவது மற்றும் நான்காவது ஷட்டர்களை இயக்கி பார்த்தனர். இயக்கமும் சரியாக இருந்தது. இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணையம் இயக்குனர் ராஜிவ் சிங்கால், இணை இயக்குனர் நிதின் குமார், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி பெரியாறு அணை செயற்பொறியாளர் சாமியின் உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

அதன்பின் மாலையில் குமுளியில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின்மத்திய மூவர் குழு தலைவர் குல்ஷன் ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, " முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. பேபி அணை பலப்படுத்திய பின் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம். பெரியாறு அணைக்கு பேபி அணைக்கும் இடையில் பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள மண்அணை மீது பாதை பராமரிப்பு பணியை தமிழக அரசு செய்யலாம்.

பேபி அணையை பலப்படுத்துவதற்காக அப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கு மின்இணைப்பு வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். இந்த பேட்டியின்போது தமிழக கேரள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

review Tamilnadu Kerala mullai periyaru dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe