திருச்சி மத்திய சிறையிலிருந்து முகிலன் ஜாமீனில் வெளியே வந்தார். முகிலனின் மனைவி தலைமையில் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர்.

சமூக ஆர்வலர் முகிலனுக்கு பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கடந்த 13 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவுபிறப்பிக்கப்பட்ட நிலையில் சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் தற்பொழுது திருச்சி மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.