சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனிடையே சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளித்துள்ள சிபிசிஐடி போலீசார், முகிலனை கண்டுபிடிப்பது தொடர்பாக 148 பேரிடம் விசாரிக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கை அளிக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.