ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின காளைகளை அனுமதிப்பதை தடைசெய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் முகிலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 179பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும். தமிழகத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின காளைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரியும் சமூக ஆர்வலர் முகிலன் தலைமையில் 'மதுரை ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்பு குழு'வினர் துமரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முகிலன், "தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.