ADVERTISEMENT

சொந்த ஊரில் சூழழியல் போராளி முகிலன்

10:52 PM Nov 20, 2018 | jeevathangavel

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன்.

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் புரட்சிகர இயக்கங்களில் பணியாற்றியவர். பிறகு கூடம்குளம் சென்று அனு உலைக்கு எதிராக மக்களை திரட்டி பெரும் போராட்டங்களுக்கு துணை நின்றதால் போராட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார். இதனால் முகிலன் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை அரசு ஏவியது. ஜல்லிகட்டு போராட்டம், கரூர் காவிரி ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்களை திரட்டி பல போராட்டங்கள் நடத்தினார்.
பல வழக்குகளின் பேரில் முகிலனை கைது செய்த போலீஸ் பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்தது. ஒரு வருடம் 9 நாட்கள் என 374 நாட்கள் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி தொடர்ந்து 55 நாட்கள் கரூரில் நீதிமன்ற பிணையில் இருந்தார். தற்போது பிணை விடுவிக்கப் பட்டது. இப்படி 430 நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்தை காண சொந்த ஊரான சென்னிமலைக்கு நேற்று 19 ந் தேதி இரவு வந்தார் முகிலன்.

சென்னிமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த முகிலன், எந்த அரசாலும் எந்த விதமான அடக்கு முறை சக்திகளாலும் என் போராட்ட உணர்வை முடக்க முடியாது. தமிழகத்தை காப்பதில் என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார். கம்யூனிஸ்ட் தோழர்கள் முகிலனை வரவேற்று வாழ்த்தினார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT