ஈரோடு மாவட்டத்தைசேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், கடந்த 140 நாட்களாக அவர் காணாமல் போனார். அதனை அடுத்து நேற்று அவர் ஆந்திர போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுதற்போது சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

Advertisment

 Mukhilan's wife injured in car accident

இந்நிலையில் அவரை காணுவதற்காக அவரது மனைவி பூங்கொடி ஈரோடு சென்னிமலையில்இருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் பொழுது கள்ளக்குறிச்சி அருகே கார் விபத்துக்குள்ளானதில் காயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் பிடியில் உள்ள முகிலனைபார்க்க வந்த போது ஏற்பட்ட விபத்தில் லேசான காயமடைந்தார் பூங்கொடி. விபத்தில் லேசான காயமடைந்தியா பூங்கோடிபின் வேறொரு காரில் சென்னைக்கு முகிலனை காண புறப்பட்டார்.