Skip to main content

கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 141 நாட்களுக்கு பிறகு திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச காவல்துறை, தமிழக சிபிசிஐடி- யிடம் முகிலனை ஒப்படைத்தது. இந்நிலையில் குளித்தலை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை கைது செய்தனர். அதன் பிறகு 10 ஆம் தேதி காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன் பிறகு 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Mukhilan appeared in Karur court

 

 

இதன் பிறகு இன்று மதியம் திருச்சி மத்திய சிறைக்கு சென்ற போலீசார் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்தனர் அப்போது முகிலன் என் மீது என்ன வழக்கு வாரண்ட் இருக்கிறதா என்றெல்லாம் போலீசை பார்த்து கேள்வி எழுப்ப போலீசார் கஸ்டடி எடுப்பதற்காக நீதிமன்றம் கொண்டு செல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். ஆனாலும் முகிலன் முரண்டு பிடிக்க பல வந்தமாக முகிலனை கரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். வழக்கம் போல் முகிலன் நீதிமன்றத்திற்கு முன்பு பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு நீதிமன்றத்தில் ஆஜரானார். போலீசார் நீதிமன்றத்தில் முகிலன் மீது பாலியல் வழக்கு உள்ளது. இது சம்மந்தமாக முகிலனை விசாரிக்க வேண்டி இருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி தர வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்கள்.

 

 

Mukhilan appeared in Karur court

 

 

அப்போது முகிலன் என்னை போலீசார் சிறைக்குள்ளேயே அடிக்கிறார்கள். போலீஸ் கஸ்டடி கொடுத்தால் என்னை மேலும் அடிப்பார்கள் என கஸ்டடிக்கு செல்ல மறுத்தார். இந்த நிலையில் நீதிபதி எழுத்துப்பூர்வமாக உங்கள் பதிலை கூறுங்கள் என முகிலனிடம் கூறியதோடு, மீண்டும் நாளை காலை முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மீண்டும் நாளை 23- ஆம் தேதி நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் எடுக்க முடிவு செய்துள்ளனர். முகிலன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு சம்பந்தமாகத் தான், இந்த கஸ்டடி என்றாலும் முகிலன் 141 நாள் எங்கே இருந்தார் யார் மூலமாக இருந்தார் என்று பல்வேறு விவரங்களை போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாவது சம்மனையடுத்து ஆஜரான எம்.ஆர். விஜயபாஸ்கர்! (படங்கள்)

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

 

ஆனால் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி கால அவகாசம் கேட்டார். இதையடுத்து கடந்த 19ஆம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு 2வது சம்மனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுப்பினர். இந்நிலையில், 25ஆம் தேதி (இன்று) காலை 11 மணி அளவில் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜராக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை நகரப் பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். 

 

 

Next Story

வெளியான வீடியோ... முடிவுக்கு வந்த ஜாக் மா சர்ச்சை!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

jack ma

 

அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, கடந்த வருடம் ஒரு மாநாட்டில் சீன அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாக அலிபாபா நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து விசாரணையில் இறங்கியது.

 

இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், ஜாக் மா பொதுவெளியில் தோன்றவில்லை எனவும், அவர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் பரவின. அரசை விமர்சித்த கோடீஸ்வரர் காணாமல் போய்விட்டதாக பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக ஜாக் மா, பொது வெளியில் தோன்றியுள்ளார். அவர், கிராமப்புற ஆசிரியர்களிடம் காணொலி மூலமாக உரையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. ஜாக் மா காணொலி வாயிலாக உரையாற்றியதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன்மூலம் ஜாக் மா காணாமல் போய்விட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.