Advertisment

மகளுடன் காதல்; கண்டித்த அத்தை கொலை! - 15 வயது சிறுவன் கைது!

சென்னை அமைந்தகரை வெள்ளாலர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அவரது வீட்டில் வலது கை வெட்டப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பிணத்தை கைபற்றி வழக்கை விசாரித்த அமைந்தகரை போலீசார் பல கோணத்தில் விசாரித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வியின் அண்ணன் சங்கரசுப்புவின் மகன் சதீஸ் (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைது செய்யப்பட்டுள்ளான்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இது குறித்து போலீசார் கூறும்போது, அதே பகுதியில் உள்ள பள்ளியில் சதீஸ் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அத்தை தமிழ்ச்செல்வியின் மகள் பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் அத்தை தமிழ்ச்செல்விக்கு தெரியவர இது காதலிக்கும் வயதில்லை என்று புத்திமதி கூறி சதீஸை கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வாரம் உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை பார்த்த தமிழ்ச்செல்வி பத்மா முன்னிலையில் சதீஸை கைநீட்டி அடித்துள்ளார். பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாத சதீஸ், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். அப்போதும், வெறி தீராத சதீஸ் அத்தை தமிழ்ச்செல்வியின் வலது கையையும் வெட்டி விட்டு தப்பியுள்ளான்.

இதில், கொலை நடந்த நேரத்தில் சதீஸ் அவரது அத்தை வீட்டுக்கு வந்து சென்ற சிசிடிவி பதிவை வைத்து கொலையை துப்புதுலக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

murder
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe