Skip to main content

85,000 குடும்பங்களுக்கு 401 டன் அரிசி வழங்கிய திமுக முன்னாள் அமைச்சர்!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

m

 

கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.  ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து,  வருவாய் இன்றி தவித்து வரும் பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்கும் படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
 

m

 

இந்நிலையில் நேற்று (10.05.2020) கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் சுமார் 401 டன் அரிசியை நேற்று வழங்கினார். 
 

m


குறிஞ்சிப்பாடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து  5 கிலோ கொண்ட அரிசி பைகளைத் தயார் செய்தனர்.  அதை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்ட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளிடம் தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்பத்தார்களுக்கும் முறையாக நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டார்.
 

அதைத்தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களைப் பார்வையிட்டு பகுதி வாரியாக வாகனங்களைப் பிரித்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு வீடு வீடாக நேரில் சென்று வழங்குமாறு அறிவுறுத்தினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''நல்லா கை தட்டலாம்... எதிர்க்கட்சியும் தட்டலாம்...'' - முதல்வரையே சிரிக்கவைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

MRK Panneerselvam who made  laugh for the Chiefminister

 

நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

பல்வேறு அறிவிப்புகளை வாசித்து வந்த அமைச்சர், கரும்பு கொள்முதல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்களை வாசிக்கையில் கரும்புக்கு ஊக்கத்தொகை டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ''கரும்பு விவசாயிகள் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க... கடந்த நிதிநிலை அறிக்கையில் 150 ரூபாய் ஏற்றிக்கொடுத்திருந்தார்கள் இந்த முறை 50 ரூபாய் ஏற்றியுள்ளார்கள். எனவே நல்லா கை தட்டலாம்... எதிர்க்கட்சியும் தட்டலாம்.... போனமுறை இதே அவையில் பணம்கேட்டு பணம்கேட்டு பத்து வருஷம் போராடினோம். பத்து வருஷம் போராடி...'' எனக்கூற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். உடனடியாக வேளாண் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசிக்க சபாநாயகர் அறிவுறுத்தியதால் மீண்டும் பட்ஜெட் உரையை தொடர்ந்தார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

 

 

Next Story

ராஜா முத்தையா கல்லூரி மருத்துவருக்கு அமெரிக்க விருது... தமிழக அமைச்சர் பாராட்டு!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

American award for Raja Muthiah College doctor ... Tamil Nadu Minister praises!

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் சுந்தரேஷ்-க்கு அமெரிக்காவின் சர்வதேச அறுவை சிகிச்சை துறையின் உயரிய விருதான 'அமெரிக்கா காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த விருது கரோனா காலம் என்பதால் இணையவழி மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

 

இதற்கான சான்று தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் ஐரோப்பாவிலிருந்து வழங்கப்படும் அறுவை சிகிச்சைக்கான 'ராயல் காலேஜ்' விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.