Skip to main content

திமுக அமைச்சரா... அதிமுக எம்எல்ஏவா - இடைத்தேர்தலில் சாதித்த எம்ஆர்கே!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

dfh

 

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியத்தில் 19-ஆவது ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் தற்போதைய வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ஆதரவு பெற்று திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் தற்போதைய சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனின் ஆதரவு பெற்று அதிமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி போட்டியிட்டார்.

 

கடலூர் மாவட்டத்தில் 5 ஒன்றிய கவன்சிலர் பொறுப்பிற்குத் தேர்தல் நடந்தாலும் குமராட்சியில் உள்ள இந்த 19-வது வார்டின் வெற்றியைக் கடலூர் மாவட்டம் அல்லாமல் தமிழக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. என்னவென்றால் திமுக அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏவாக சிதம்பரம் தொகுதியில் இருமுறை இருக்கும் பாண்டியனின் சொந்த ஊர் என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற  வைப்பதில் பாண்டியன் தீவிரமாகச் செயல்பட்டார். அதேபோல் வேளாண் அமைச்சரும் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றிக்கு என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொண்டு இருந்தார்.

 

இது இருதரப்பிற்கும் கடும் போட்டியை ஏற்படுத்தி மாவட்டத்தில், கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்த பதிவான 4149 வாக்குகளில் திமுக வேட்பாளர் சங்கர் 2041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் அதிமுக வேட்பாளர் சுந்தரமூர்த்தி 1860 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். பாமக வேட்பாளர் சசிக்குமார் 134 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக வேட்பாளரின் வெற்றியை அறிந்த திமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே திமுக அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரித்தவாறு வெடிவெடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், குமராட்சி ஒன்றிய செயலாளர் ரஜேந்திரகுமார், ஒன்றிய பொறுப்பாளர் மஞ்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சங்கருக்குச் சால்வையை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார்கள். 

 

dfh

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.260 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Groundbreaking ceremony for projects worth Rs.260 crore: Ministers attend

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.6.30 கோடி மதிப்பிலான நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், ரூ. 259.91 கோடி மதிப்பீட்டில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 36 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை மாலை  நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசுகையில், ''கடலூர் மாவட்டத்திற்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்வதற்கு ரூ 419 கோடிக்காண வரைவு திட்டத்தை அனுமதி அளிக்க கோரி அனைவரது முன்னிலையில் உள்ளாட்சி துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். தற்போது ரூ 260 கோடியில் அனைவரும் நல்ல குடிநீர் குடிக்கும் வகையில் புதிய திட்டத்தை தற்போது அளித்துள்ளார். இதற்கு கடலூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. பழைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. சிதம்பரம் சுற்றுலா தளம் என்பதால் அலங்கார மின் விளக்குடன் நடைபாதையுடன் குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நகருக்கு உள்ளே வராமல் பேருந்து நிலையத்திற்கு செல்ல ரூ 40 கோடியில் வெளிவட்ட சாலை அமைக்கபடவுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாதம்  ரூ 1000  உள்ளிட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடர்ந்து கேட்பதெல்லாம் கொடுப்பதால் மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் முதல்வர் இடம் பெற்றுள்ளார்'' என்றார்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 438 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி 34 லட்சத்து 49 ஆயிரத்து 169 ரூபாய்க்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி  பேசுகையில், ''தமிழ்நாட்டில் பேரூராட்சிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 4 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஓதுக்கி வழங்கியுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1972-ல் தொடங்கப்பட்டது. மொத்தம் இதுநாள் வரை 544 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு இதுவரை ஆண்டுக்கு 1 கோடி 70 லட்சம் பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் ஏழே கால் கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் நகராட்சி துறைக்கு ஆண்டு தோறும் 25 ஆயிரம் கோடி, ஊராட்சி துறைக்கு  21ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறையில் 8000 பொறியாளர்கள் இருக்கவேண்டிய  இடத்தில் 2000 பேர்தான் உள்ளார்கள். குறைவாக இருந்தாலும் திட்டங்களை கால தாமதம் இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது 5000 பொறியாளரை புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வேளாண்துறை அமைச்சர் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.419 கோடி திட்டத்திற்கு வரைவு அறிக்கை கொடுத்து நிதி கோரியுள்ளார். முதல்வரிடம் தெரிவித்து நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் க.சிவராசு ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். விழாவில்  கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ துரை கி.சரவணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா,  துணை மேயர் பா.தாமரைசெல்வன், நகரமன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் க.பழனி, முன்னாள் நகரமன்ற தலைவர் வி.எம்.எஸ். சந்திரபாண்டியன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், திமுக நிர்வாகிகள் ப.அப்பு சந்திரசேகரன், ஏஆர்சி.மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நகராட்சி ஆணையாளர் மல்லிகா நன்றி கூறினார். முன்னதாக ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடராஜர் கோயில் தெப்பகுளமான சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளம் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு புணரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் திறந்து வைத்தனர்.

Next Story

“மண் வளத்தை காக்க புதிய திட்டம்” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் பேசியதாவது, “2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. 

கடந்த டிசம்பரில், தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட 6 கோடி மானியம் வழங்கப்படும். பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு 6.27 கோடி நிதி ஒதுக்கீடு. மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பஞ்சகவ்யம், மண்புழு  உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி ஒன்றிய மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம். மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடினத்தைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். பருத்தி சாகுபடி பெருக்கத்தை அதிகரிக்க 14.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.” என்று கூறினார்.