Advertisment

செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை

MRI scan for Senthil Balaji

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் இருந்த நிலையில், கடந்த 15/11/2023 அன்று உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணிற்கான மருத்துவ பரிசோதனைகள் இன்றுநடைபெற இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை காரணத்தால் முறையாக உணவுகள் எடுத்துக் கொள்ளாததால் செந்தில் பாலாஜிக்கு இந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக இரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இன்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

minister Treatment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe