மிஸ்டர் வேர்ல்டு 2017-2018 பட்டங்களை வென்றவர் டோனீஸ் ஃபிட்னஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். மணிகண்டன். அக்டோபர் 1-7 வரை உஸ்பெகிஸ்தான் டாஷ்கண்டில் நடைபெற உள்ள 12வது WBPF உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளார். சர்வதேச அரங்கில் 3வது முறையாக இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கும் ஒரே பாடி பில்டர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மணிகண்டன்.