Advertisment

கவிஞர் புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நக்கீரன் பொறுப்பாசிரியர் (படங்கள்) 

Advertisment

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின், புலமைப்பித்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

புலமைப்பித்தன் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

pulamaipithan
இதையும் படியுங்கள்
Subscribe