Advertisment

'ஓட்டு கேட்க வரவில்லை..நன்றி சொல்ல வந்திருக்கிறேன்' மக்களிடம் எடுத்து சொன்ன எம்.பி.!!

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தொகுதியில் உள்ள வாக்காள மக்களுக்கு நன்றி சொல்லி வருகிறார். அதுபோல் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் கிராமங்கள் தோறும் நடைபெற்றது நன்றி தெரிவிக்க வந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமிக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisment

MP thanked people

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த வேலுசாமி மக்களிடம் மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி பொது மக்களிடம் பேசும்போது, "நிலக்கோட்டை தொகுதியில் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவேன் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடரிலேயே உங்களது கோரிக்கையை எடுத்து வைத்து பேசியுள்ளேன். அந்தக் கோரிக்கையை பெற்று விரைவில் நறுமண தொழிற்சாலை கொண்டு வருவதற்காக பாடுபடுவேன்" என்று பேசினார்.

Advertisment

MP thanked people

அதை தொடர்ந்து விளாம்பட்டியில் உள்ள மக்களுக்கு எம்பி வேலுசாமி நன்றி சொல்ல சென்று கொண்டிருக்கும் போது விளாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 நாள் வேலை பணியில் பொதுமக்கள் பலர் வேலை பார்ப்பதை கண்டு வண்டியை நிறுத்தி விட்டு பள்ளிகூடத்துக்குள் சென்றார். அதைக்கண்டு 100 நாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த சில பெண்கள் இப்பதானே ஓட்டு போட்டோம் அதற்குள் மறுபடியும் ஓட்டு கேட்க வருகிறார்கள் என்று குரல் கொடுத்தனர். அதைக் கேட்ட எம்பி வேலுச்சாமி "அம்மா நான் ஓட்டு கேட்க வரவில்லை, நீங்க எனக்கு ஓட்டுப் போட்டதற்க்கு நன்றி சொல்வதற்காக வந்திருக்கிறேன்" என்று கூறி அனைவருக்கும் நன்றி செலுத்திவிட்டு சென்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

thanks
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe