Advertisment

“என்னைத் தாங்கிச் சுமப்பவன்..” - வைரலாகும் தமிழச்சி எம்.பி.யின் வாழ்த்துக் கவிதை

MP Thamizhachi birthday wishes to Minister Thangam Thennarsu

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு இன்று பிறந்தநாள். இவருக்கு திமுகவினர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும், எம்.பி.யுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதையாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

MP Thamizhachi birthday wishes to Minister Thangam Thennarsu

அமைச்சர் தென்னரசுவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

என் கண்ணீர் காணப் பொறுக்காதவன்

என் சிரிப்பின் விலை உலகென்றாலும் பெற்றுத் தரத் துணிபவன்

என் குறைகளின் கனமுடன் என்னைத் தாங்கிச்

சுமப்பவன்

என் நிறை கண்டால் பூரித்துப் பூப்பவன்

என் அத்தானின் அணுக்கக் கவசம்

என் மகள்களின் யானைபலத் தாய்மாமன்

அன்னையும் அத்தனுமற்ற

என் வாழ்வில் என்றென்றும்

தலைப்படுவேன்

என் தம்பியின் தோளில்

எனும் பெருமையுடன்…

பிறந்தநாள் வாழ்த்துகள் “ கண்ணு”

என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவு சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe