/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_21.jpg)
மதுரை தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினராக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்ப் பிரிவுதலைவராக இருக்கும் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக மதுரை எம்.பிசு.வெங்கடேசன், அவரது ட்விட்டரில் ‘தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்தஇழிவு செயலுக்காகக் கொடுக்கப்படும் பரிசா? மதுரையில் எய்ம்ஸ் அமையவேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு கனவு மற்றும் போராட்டம்.’ எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us