Advertisment

"சீமானுக்கு டஃப் கொடுக்குறீங்க நித்தி" - சீமானை கலாய்த்த திமுக எம்.பி.!

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே நித்யானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுதிறது.

Advertisment

mp-senthilkumar-tweet-about-nithyananda-and-seeman

இதற்கிடையில் நித்யானந்தா எது பேசினாலும், அது சமூக வலைதளங்களில் சென்ஷேசன் ஆகி விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா பேசிய "மீனாச்சி மீனாச்சி...என்னாச்சு என்னாச்சு" என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உச்சத்தை தொட்டது. இதே போல் "நான்கு பேர் நான்கு விதமாய் பேசினால் அது நாடு. நான்கு பேர் நான்கு விதமாய் என்னைப்பற்றி பேசினால் அது தமிழ்நாடு" என்று சமீபத்தில் அவர் பேசிய வீடியோவும் டிரெண்ட் ஆனது.

இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் ஆமைக்கறி, போர்களத்திற்கு நடுவே உணவு சாப்பிட்டேன், குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசம் செல்வேன் என கூறியதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நித்யானந்தா வீடியோ ஒன்றை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கலாய்த்திருக்கிறார். அந்த பதிவில், ' நித்தி தலைவா நீங்க வேற...வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல... சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
nithyananda seeman sp senthilkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe