கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று எம்.பி ரவீந்திரநாத்குமார் நேரில் ஆஜராகி சாட்சியளித்தார். ரவீந்திரநாத்திடம் விசாரணை முடிந்த நிலையில்அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.