அதிமுக எம்.பி முகமது ஜான் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்தும்அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இந்த சட்டம் இஸ்லாமிய மக்களை பெரும் மனத்துயரத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி முகமது ஜான் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்த இஸ்லாமிய அமைப்புகள், அவரை ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.