கரூரில்லைட்ஹவுஸ் ரவுண்டானா அகலத்தை குறைக்ககாங்கிரஸ் சார்பில்வைக்கப்பட்டிருந்த காந்திசிலைஅகற்றப்பட்டது. இந்நிலையில் பனியன் உரிமையாளர்கள் சங்கம்சார்பில்திடீரெனரவுண்டானாவில் புதிய காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரமற்றபீடத்தின் மீது காந்தி சிலைநிறுவப்பட்டுள்ளதாகவும், முதல்வர் திறந்து வைப்பதற்காகத்தான் அவசர கதியில்தரமற்றபீடத்தின் மீது சிலைவைக்கப்பட்டுள்ளது எனவும் கரூர்காங்கிரஸ் எம்.பிஜோதிமணிதலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு காந்தி சிலைதரமற்றபீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டகாங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர்குண்டுக்கட்டாக போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.