ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் சென்றனர்.அப்போதுராகுல் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதோடு, அவரை தள்ளிவிட்டதுஅப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது செய்யப்பட்டுள்ளார்.