Movie theater

Advertisment

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு அதிகமாக புழங்குவதாக புகார்கள் எழுந்தது.

அதையடுத்து டெங்கு கொசு ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது டெங்கு கொசு பரப்பும் வகையில் சினிமா தியேட்டர் இயக்கியதாக “முருகவேல் பேலஸ்” என்ற திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்து ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.

Advertisment

மேலும் கொசுவை ஒழிக்க தவறிய பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் இயங்கிய நான்கு திரையரங்குகளில் மூன்று நலிவடைந்ததால் ஏற்கனவே மூடபட்டது.