இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

Advertisment

Movie stars

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கால் வேலையிழந்துள்ள 25,000 தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் உதவ உள்ளதாகத் தகவல் வெளியாகின. அதன்படி திரைத்துறையில் உள்ள தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சல்மான்கான் நிவாரணத் தொகையைச் செலுத்தி வருவதாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000 தினக்கூலி தொழிலாளர்களின் இறுதிகட்டப் பட்டியலை சல்மான் கானிடம் கொடுத்தோம். தவணை முறையில் அவர்களுக்குப் பணம் செலுத்துவதாகசல்மான் கான் கூறியிருந்தார். அதன்படி 09.04.20 தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் முதற்கட்டமாக தலா 3000 ரூபாயை சல்மான் கான் செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். எங்கள் தொழிலாளர்களுக்கு உதவும் அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

Advertisment

இவர்கள் சொல்கிற கணக்குபடி நடிகர் சல்மான்கான் 6 கோடியே 90 இலட்ச ரூபாய் செலுத்தியுள்ளார் சல்மான்கான்.

http://onelink.to/nknapp

நடிகர் அமிர்தாப்பச்சன் இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப்பட தொழிலாளர்கள் 1 லட்சம் பேருக்கு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை அவர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம், நடிகர் அஜித் 25 லட்சம், தனுஷ் ரூ. 15 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் கொடுத்தும் இன்னும் சிலர் அரிசி மூட்டைகள் கொடுத்தும் உதவினர். அந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக நயன்தாரா அறிவித்துள்ளார்.