'இரண்டாம் குத்து' படத்தில் நடித்தவர்களைக் கைது செய்யக் கோரி புகார்!

g

'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ். இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,'இரண்டாம் குத்து' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்தப் படத்தின் நடிகர்களைக் கைது செய்ய வேண்டும் என பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Movie
இதையும் படியுங்கள்
Subscribe