
மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலிக் கூட்டமும், அனைத்துக்கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலமும் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத் திமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி, வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜி.பி.ராஜா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் செயலாளர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

