Advertisment

ஏற்றப்பட்டது 'மகா தீபம்' -அரோகரா கோஷத்தால் அதிர்ந்த திருவண்ணாமலை

Mounted 'Maha Deepam' - Tiruvannamalai rocked by Arokhara Kosha

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச விழாவாக இன்று(13.12.2024) 2668 அடி உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக இன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம் கோவில் கருவறையில் ஏற்றப்பட்டது. தீபத்தை காண பெருமழையும் பொருத்தப்படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். 14.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலையை பக்தியுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அரோகரா கோஷத்தால் அதிர்ந்துள்ளது திருவண்ணாமலை. இதனால் திருவிழா கோலம் பூண்டுள்ளது திருவண்ணாமலை.

Advertisment

தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக சுமார் 18,000 போலீசாரை திருவண்ணாமலை மாநகரத்துக்குள் குவித்துள்ளது மாவட்ட காவல்துறை. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் வடக்கு மண்ட ஐ.ஐீ அஸ்ராகார்க் முன்னிலையில் 14 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.தற்போது மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள தீப கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது .இந்த தீபம் 11 நாட்கள் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

deepam thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe