ADVERTISEMENT

அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

01:33 PM Mar 12, 2018 | rajavel


குரங்கணி வனப்பகுதியில் அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டனர். காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். வரும் காலத்தில் அனுமதி பெறாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் மலையேற்ற பயிற்சிக்கு சென்றதால்தான் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை. அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும். காட்டுத்தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை, தீ அணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT