Skip to main content

பொன்மலையில் இருந்து ஊட்டிக்கு புறப்படப்போகும் மலை ரயில்கள்... (படங்கள்)

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 112 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் மலை ரயில் துவக்கப்பட்டது. இதற்கான நீராவி என்ஜின் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் பொன்மலை ரயில்வே பணியாளர்கள் இதனைப் புனரமைத்துவருகின்றனர். நிலக்கரி பயன்படுத்தி மலை ரயில் என்ஜின் இயங்குவதால் காட்டு பகுதியில் தீப்பற்றிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

 

இதன் காரணமாக தற்போது பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், முற்றிலும் பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்ட இரண்டு மலை ரயில் என்ஜின்கள், ஊட்டிக்குப் புறப்பட தயாராக உள்ளன. 9.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க பொன்மலை ரயில்வே பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கைவண்ணத்தில் தயாராகியுள்ளது. முற்றிலும் இந்திய தயாரிப்பான இந்த 2 ரயில் என்ஜின்களின் கட்டுமான பணியானது முடிவுற்று, சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

 

இந்த இரண்டு ரயில் என்ஜிகளும் வரும் புதன்கிழமை (25.08.2021) டிரைய்லர்கள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட உள்ளது. 3,600 பாகங்கள் கொண்ட இந்த மலை ரயில் என்ஜின், மலைப்பகுதியில் 11 கிமீ வரை வேகம் செல்லக்கூடியது. இதுவரை 4 நீராவி மலை ரயில் என்ஜின்கள் பொன்மலை பணிமனையில் தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்