தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், இன்று 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உதகை மலை ரயில் சேவை மழைப்பொழிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
மழைப் பொழிவு காரணமாக மட்டுமல்லாமல் கள்ளாரில்இருந்து ரன்னிமேடு பகுதிக்கு இடையேயான தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் கடந்த நான்காம் தேதி முதல் மலை ரயில் நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு மலை ரயில் உதகை புறப்பட்டுச் சென்றுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.