திருச்சி மாவட்டம், துறையூர் புத்தாநத்தம் அருகில் சிலம்பம் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சின்ன காளை(45). இவர், ஆடு, கோழி, மாடு ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவை அனைத்தும் வீட்டில் கட்டப்பட்டிருந்த நிலையில், தீடீரென ஆடு மற்றும் கோழி சத்தமிட்டுள்ளன. அதனால் பட்டியில் சென்று பார்த்த போது அங்கு 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் அடிப்படையில், சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பை பிடித்து மருங்காபுரி பச்சமலைப் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.