Advertisment

உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகள்..! (படங்கள்)

காவல்துறையினர் பொது மக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்தும்தொடர்ந்துஎடுத்துக் கூறியும் பலரும் அதனைக் கண்டுக்கொள்ளாது, தலைக்கவசமின்றி வாகனத்தில் பயணிக்கின்றனர். மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும், பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், இலவசமாக தலைக்கவசம் வாங்கிக் கொடுத்தும், அபராதம் விதித்தும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

Advertisment

ஆனாலும் பெரிதும் விழிப்புணர்வு ஏற்படாத வகையில், பலரும் அசாதாரணமாக பாதுகாப்பின்றி வண்டிகளில் பயணிக்கின்றனர். அதேபோல் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு செய்வதற்காக மாதிரி தலைக்கவசம் வைத்திருந்தனர். அதையும் மீறி உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் பெருமளவில் தலைக்கவசம் அணியாமல் பயணித்து வருகின்றனர்.

Advertisment

Chennai police POLICE AWARENESS
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe