Motorists suffer for sudden pothole in the road at chennai

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சில கிரீம்ஸ் சாலையில் திடீரென 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று (21.10.2024) மாலை 05.15 மணி அளவில் இந்த பள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவதியடைந்தனர்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைத்து வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி அப்பகுதியில் நடந்து வருவதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

சுமார் பத்து அடி ஆழத்திற்கு, 3 அடி அகலத்திற்கு இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சில கிரீம்ஸ் சாலையில் திடீரென 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.