Motorcycle thief arrested under goondas act law

சேலத்தில் உயர் ரக மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடி வந்த திருடனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், இடைப்பாடி, சேலத்தில் நகரம், செவ்வாய்பேட்டை, பள்ளப்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் ஆகிய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பு ஆண்டு ஏப்ரல் வரை 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயிருந்தன. இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.

Advertisment

மேற்படி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்களில், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்த ராஜா (வயது 45) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர், உயர் ரக மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இடைப்பாடி காவல்நிலைய வழக்கில் அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25- ஆம் தேதி, சேலம் களரம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், ஆள்கொல்லி பாலம் அருகே சென்றபோது அவரை கத்தி முனையில் மிரட்டி, 1,200 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை பறித்துச்சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராஜாவை சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ராஜாவை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.