Advertisment

மோட்டார் சைக்கிள் பேரணி: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

prpondiyan

Advertisment

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், தேர்தல் அறிக்கையில் கர்நாடகாவிற்கு சாதகமாக காவிரி நீர் பிரச்சினையை அனுகுவோம் என்ற உத்தரவாதம் அளித்துள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேசிய செயலாளர் முரளிதரராவ் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணாக அறிக்கை வெளியிடுமானால் அதனை தடை செய்ய வேண்டும். அந்த தேர்தல் அறிக்கையை தடை செய்திட முழு முயற்சியை எடுப்போம், போராட்டமும் நடத்துவோம். தேவையென்றால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். காவிரி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இறுதி கட்ட போராட்டமாக வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக தூணில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி வருகிற 25-ந் தேதி(புதன் கிழமை) தொடங்குகிறது. திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் வழியாக சென்னையை அடைகிறோம். பின்னர் அங்கிருந்து புறபட்டு திருவாரூர் வந்து திருவாரூரில் பேரணியை நிறைவு செய்கிறோம். இவ்வாறு கூறினார்.

Motorcycle rally interview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe