Advertisment

இருசக்கர வாகன விபத்து! பெண் மருத்துவர் மீது ஏறிய அரசுப் பேருந்து! 

Motorcycle accident! Female doctor passed away

Advertisment

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கதிர் முத்துக்குமார். காசநோய் டாக்டரான இவரின் மனைவி விஜயலட்சுமியும், அவரது பெண் தோழி ப்ரியாவும், இருசக்கர வாகனத்தில் சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளனர். சினிமா முடிந்தவுடன் இருவரும் டூவீலரில் கிளம்பியுள்ளனர்.

பிரியா வாகனத்தை ஓட்ட விஜயலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தியேட்டரை விட்டு வெளியே வந்த உடன் டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து அங்கே வந்த அரசு பஸ் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி இரு பெண்களும் கீழே விழுந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விஜயலட்சுமி மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Doctor trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe