Advertisment

'தாயின் கருவறையும் கல்லறையும் தான் பாதுகாப்பான இடம்'-பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு தற்கொலை!

'Mother's womb and grave is a safe place' - incident in kanjipuram

Advertisment

அண்மையில் கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் 'யாரையும் சும்மா விடாதீங்க' என மனம் உருக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் சோக வடுக்கள் காயும் முன்னரே கரூரில் இதேபோல்பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக உருக்கமாக 'பாலியல் தொல்லையால் இருக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டு'ம் எனகடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்ச்சியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

'Mother's womb and grave is a safe place' - incident in kanjipuram

இந்நிலையில் இதேபோல் காஞ்சிபுரத்தில் சிறுமி உருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினோராம் வகுப்பு பயின்று வந்த அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி சில நாட்களாக மன உளைச்சலிலிருந்ததாகவும், பழைய தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் மட்டுமே பேசி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக சிறுமி எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் 'பாலியல் தொல்லைகள் நிறுத்தப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ள சிறுமி, 'தாயின் கருவறையும் கல்லறையும் தான் பாதுகாப்பான இடம். உறவு முறைகளும் பள்ளியும் பாதுகாப்பு இல்லாதவை' எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

kanjipuram police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe