Advertisment

அன்னையர் தினத்தில் சிறப்புக் குழந்தைகளின் அன்னையர்களைக் கெளரவப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு ஸ்ரீ ஃபவுண்டேஷன் சார்பில் நிறுவனர் கிருஷ்ணர் தலைமையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மாவட்டச் செயலாளர் ஆர். இளங்கோ, எஸ். சூரியா, சுந்தர்ராஜன்முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

அதேபோல் திருச்சி கீழவயலூர் ஸ்ரீகோசாலையில் சிறப்பு (மனநலம் பாதித்த) குழந்தைகளின் அன்னையர்களைக் கௌரவப்படுத்தினார்கள். இந்நிகழ்விற்கு துறையூர் தாய் கோவில் நிறுவனர் சுரேஷ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், சிறகுகள் மனநல பெற்றோர்கள் சங்க நிறுவனர் சுந்தரம், முதுகு தண்டுவடம் சங்க செயலாளர் ராஜ்சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அன்னையர்கள் உடன் சேர்ந்து விளையாட்டுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.குழந்தைகளின் தாய்மார்கள் சுமார் 100 பேருக்கு மேல் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.