Advertisment

கவின் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் பள்ளியில் அன்னையர் தின விழா

ஒவ்வொரு அன்னையர் தினமும், தன்மீது தன்னலமின்றி அன்புசெலுத்தும் ஒவ்வொரு தாயிற்கும் குழந்தைகள் தங்களது அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்பட்ட நாள். அப்படிபட்ட சிறந்த நாளானஅன்னையர் தினமான மே 12-ஆம் நாள்தாயிற்கும்சேயிற்கும் இடையேயான அன்பை வண்ண மயமாகவெளிப்படுத்தும் விதமாக சென்னை வேளச்சேரியில் நிறுவப்பட்டுள்ள கவின் ஆர்ட்ஸ் ஆப்ஸ்கூலில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisment

அந்த நிகழ்வில் முக்கிய நோக்கமாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான அன்பையும், அன்பின் வெளிப்பாடுகளையும், வாழ்த்துகளையும் கலையின் மூலம் வெளிப்படுத்த முயன்று வெற்றிகொண்டோம் என்றார் கவின் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸின்நிறுவனர்,ஓவியர் மற்றும் இயக்குனர் என பன்முகங்களை கொண்ட சத்தியமூர்த்தி அவர்கள்.

Advertisment

அன்னையர் தின விழாவில் களிமண் பொம்மை (clay modeling), சுவர்கை அச்சு ரேகை பதிப்பு (impression) என பல நிகழ்வுகள்நடைபெற்றது. மேலும் குழந்தைகளும் தாய்மார்களும் தங்களின் கையொப்பங்கள் மற்றும் அன்பு வாசங்களை சுவரில் எழுதி தங்களின் அன்பையும், அன்னையர் தின வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டது விழாவின் உச்சமாக இருந்து.

school Artist Mother's Day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe