கையில் பணமில்லாததால் மருத்துவமனையில் உயிரிழந்த தன்னுடைய மனைவியை சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்ல வசதியில்லாததால் உயிரற்ற உடலை தோளில் சுமந்ததும், இன்னொருவர் மிதிவண்டியில் வைத்து சென்றதும், இறந்தவரின் உடலை ஒடித்துக் கட்டி சுமைதூக்கியாக சென்ற அவலமும் இங்கு இந்தியாவில் தான் உள்ளது. அது போல் தூத்துக்குடியில் நோயினால் இறந்த தன்னுடைய தாயின் இறுதிச்சடங்கிற்கு பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் உடலை வீசி சென்றுள்ளார் மகன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z14_14.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தூத்துக்குடி தனசேகரன் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு முத்துலெட்சுமணன் என்ற மகனும் உண்டு. நாராயணசாமியும், முத்துலெட்சுமணனும் புரோகிதம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இதில் நாராயணசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி வேலைபார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நோயின் கோரப்பிடியில் படுத்தப் படுக்கையாக இருக்கும் உடல் நலமற்ற தாய் வசந்தியை மகன் கவனித்து வந்திருக்கின்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z13_12.jpg)
இந்நிலையில் திங்களன்று தாய் வசந்தி இறந்துவிடவே உறவினர்களும் இல்லை உடன்பிறந்தோரும் இல்லாத நிலையில் இறுதிச்சடங்கிற்கு வழியின்றி தவித்த மகன் முத்துலெட்சுமணன் தனது தாயை குளிப்பாட்டி பொட்டு வைத்து சேலை அணிவித்து தாயின் உடலை தனசேகரன்நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சென்றிருக்கின்றார். அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் குப்பைத்தொட்டியில் பிணம் இருப்பதாக துப்புரவு பணியாளர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவே, இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முத்துலெட்சுமணனிடம் விசாரணை நடத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Tuty-(3).jpg)
"புரோகிதத் தொழிலில் ஜீவனம் நடத்திவரும் தான் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 1 இலட்சம் வரை கடன் பெற்று பார்த்துள்ளேன். ஞாயிறன்று புரோகிதம் செய்வதற்காக எட்டையாபுரம் பகுதிக்கு சென்றுவிட்டேன். திங்களன்று வரும் போது அம்மாவின் உயிர் பிரிந்திருந்தது. எங்களுக்கென்று சொந்த பந்தம் இல்லை. கையில் பணமுமில்லை. வேறுவழியில்லாமல் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டேன்."என கண்ணீருடன் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார் முத்துலெட்சுமணன். இதனையடுத்து பிராமணர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மையவாடியில் எரியூட்டப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)