Advertisment

''அம்மாவின் ஆயுதக்கிடங்கே...''-சர்ச்சையில் சிக்கிய சசி போஸ்டர்!

publive-image

Advertisment

வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் மதுரைக்காரர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் சில நேரங்களில் சில போஸ்டர்கள் சிக்கலில் சிக்க வைத்துவிடும். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தற்பொழுது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல்கள் நீண்டு வரும் நிலையில் நடந்த அதிமுக பொதுக்குழு, எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவி என எதுவுமே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கானது விசாரணையில் உள்ளது. மறுபுறம் சசிகலா அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரையும் ஒன்றிணைப்பது என் கடமை என எல்லா செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதால் தமிழக டிஜிபி அலுவகத்தில் பாதுகாப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா-ஓபிஎஸ்-ஐ இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டரில் 'அன்று சீதை வடித்த கண்ணீரால் இலங்கை அழிந்தது; இன்று சின்னம்மா வடித்த கண்ணீரால் எடப்பாடி கூட்டம் அழியும். அம்மாவின் ஆயுதக்கிடங்காக திகழும் சின்னம்மா இருக்கும் பொழுது வெற்றி நமதே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

sasikala admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe