Advertisment

இரண்டு குழந்தைகளை கொலை செய்த தாய்... இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய மகிளா நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் புதுக்குளம்- கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாயிபாபு (37). இவர் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள திம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள தனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.

Advertisment

இவர் தனது சொந்த கிராமத்தில் மகளிர் குழு மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதுமட்டுமில்லை, மேலும் சிலரிடமும் கடன்கள் வாங்கி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் தொல்லை அதிகரிக்கவே மனமுடைந்த சாயிபாபு தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, கடந்த 17.07.2017 அன்று தனது மகன்களான கோகுலன் (8), கோஷன் ப்ரியன் (6) இவர்களை அழைத்து சென்று தனசேகரன் என்பவரது கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். அடுத்து தானும் கிணற்றில் குதித்தார். அதில் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சாயிபாபுவை காப்பாற்றினர்.

Advertisment

mother wrong decision childrens incident cuddalore court judgment

இது குறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொன்ற தாய் சாயிபாபுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

judgement mahila court Cuddalore Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe