Advertisment

மகனின் இறுதிச்சடங்கை நேரலையில் கண்ட தாய்; புதுக்கோட்டை துயரம்

Mother witnesses son's funeral live; Tragedy in Pudukottai

Advertisment

சீனாவில் இறந்த தங்களதுமகனின் இறுதிச்சடங்கை பெற்றோர்நேரலையில் கண்டதுயரம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்தசையது அபுல்ஹசன் மகன் ஷேக் அப்துல்லா. 22 வயதான இவர் 2017 - 2018 ஆம் ஆண்டில் சீனாவின் மருத்துவம் பயிலச்சென்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மருத்துவப் படிப்பு முடிந்த நிலையில், மருத்துவப் பயிற்சிக்காக சீனாவில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவிற்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகளைஉறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு முடியாவிட்டால் அங்கேயே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், மாணவர் இறந்து 16 நாட்களுக்குப் பிறகு சீனாவில் மாணவர் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் காட்சிகள் புதுக்கோட்டையில் இருக்கும் அவரது உறவினர்களுக்கு நேரலையில் காட்டப்பட்டது. மகனை இழந்த தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதிச்சடங்கை பார்த்தனர்.

china pudhukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe