Advertisment

மகனுடன் சென்ற தாய்; நொடிப் பொழுதில் நேர்ந்த சோகம்

 mother who was riding a motorcycle with her son passed away near Bhavanisagar.

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அடுத்த மெக்கானிக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வர்ஷலா(58). உடல்நலம் சரியில்லாததால் வர்ஷலாவை அவரது இளைய மகன்,நேற்று மாலை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குமோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

Advertisment

தொட்டம்பாளையம் அருகே சென்றபோது, திடீரென வர்ஷலாவுக்குதலைச் சுற்றல்ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார். இதில் அவருக்குத்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police mother Erode
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe