Advertisment

ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கக் கோரிக்கை மனு அளித்த தாய்!

The mother who filed the petition in tears at the Collector's Office

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் ராஜா (29). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாகச் சவுதி அரேபியாவிற்குக் கடந்த வருடம், இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் ராஜா பலியானார்.

Advertisment

இறந்துபோன ராஜாவின் உடலைத் தமிழகம் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். 20 நாட்களாக அந்த நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் முயற்சி செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தனது மகனின் உடலைத் தமிழகம் கொண்டுவர தாய் கண்ணாமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கக் கோரிக்கை மனு அளித்தார்.

Advertisment

abroad jobs trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe