Advertisment

பெற்ற தாயே செய்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

A cruel mother who did what she shouldn't have done at virudhunagar

பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை, பெற்ற தாயே விற்பனை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி முத்துச்செல்வி. இந்த தம்பதியருக்கு கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து, முத்துச்செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் சிகிச்சைக்காக சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சென்றிருந்தார்.

Advertisment

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் குழந்தை குறித்து கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு முத்துச்செல்வி, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், ராஜபாளையம் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், முத்துச்செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், முத்துச்செல்வி தனது குழந்தையை ராஜேஸ்வரி, தென்காசியைச் சேர்ந்த ஜெயபால், ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி ஆகியோர் மூலம் ஹசீனா என்பவருக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து முத்துச்செல்வி, ராஜேஸ்வரி, ரேவதி மற்றும் ஹசீனா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கின்ற ஜெயபாலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Investigation Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe