
பிறந்து ஒரு மாதமே ஆனா குழந்தையை பெற்ற தாயே உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் புதுச்சேரி மனப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி எல்லைப்பகுதியான மனப்பட்டு சுடுகாட்டில் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. குழந்தையின் கால்கள் வெளியே தெரியும்படி இருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரித்தனர். குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

உடனடியாக குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் குறித்து விசாரிக்கையில் சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குமரேசன்-சங்கீதா தம்பதிக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இந்த பகுதியில் வசித்து வந்துள்ளனர். மேலும் விசாரணையில் 29 நாட்களுக்கு முன்பு தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், உடல்நிலை சரியில்லாததால் குழந்தை இறந்து விட்டதால் அதனை புதைத்ததாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் குழந்தையின் தாயிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் மதுபோதையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாய் சங்கீதாஅந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் உயிருடன் குழிதோண்டி புதைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். பெற்ற குழந்தையை உயிருடன் புதைத்த தாய் சங்கீதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)