Advertisment

தனிமையில் இருக்கும்போது இடையூறு; ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

mother who beat a  child with a boyfriend in salem

Advertisment

தாரமங்கலம் அருகே, ஆண் நண்பருடன் மது போதையில் சந்தோஷமாக இருந்தபோது அழுது இடையூறு செய்த குழந்தையை சுவரில் தூக்கிஅடித்துக் கொலை செய்த இளம்பெண்ணையும், ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவியும்குழந்தையும் உள்ளனர்.இவர், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள காடம்பட்டியில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியைச் சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி கலைவாணி (27) ஆகியோரும் வேலை செய்து வருகிறனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களும் குடும்பத்துடன் இங்கேயேதங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் மல்லேஷூக்கும்கலைவாணிக்கும்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்துகலைவாணியும்மல்லேஷூம் அடிக்கடி ரகசியமாக சந்தித்து, சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கலைவாணியால் மல்லேஷை பிரிந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர், தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லேஷூடன் சென்றுவிட்டார். ஓமலூர் அருகே புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் அவர்கள் இருவரும் கணவன், மனைவி எனக்கூறி வேலைக்குச் சேர்ந்தனர். கலைவாணியை அடையத் துடித்த மல்லேஷூக்கு அவருடைய குழந்தையை ஏற்க மனமில்லாததால், குழந்தையை வளர்ப்பது குறித்துஇருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னால் அந்தக் குழந்தையை ஏற்க முடியாது என மல்லேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Advertisment

இதன்பிறகு ஒருவழியாக சமாதானம் அடைந்த அவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அதே போதையுடன் இருவரும் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில், குழந்தை அழுது இடையூறு செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் குழந்தை என்றும்பாராமல் தூக்கி சுவரில் அடித்துள்ளனர். பலத்த காயம் அடைந்த குழந்தையை மறுநாள் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றிபெண் குழந்தை உயிரிழந்தது.இதற்கிடையே, கலைவாணியும்மல்லேஷூம்குழந்தையை சுவரில் தூக்கி அடித்ததால்தான் குழந்தைக்கு காயம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தாரமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிப்பதற்தாக காவல்துறையினர் நிகழ்விடம்விரைந்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

arrested police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe