Advertisment

குழந்தை முன்பு விபரீத முடிவு எடுத்த தாய்; தீவிர விசாரணையில் போலீஸ்

Mother of two children lost their life

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராமசாமி. அவருடைய மனைவி அன்னபூரணி வயது 26. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே ஊரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். லாரி ஓட்டுவதற்கு வெளியூர் சென்றிருந்த ராமசாமி நேற்று இரவு தான் வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அன்னபூரணி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது இதைக்கண்ட அவருடைய 7 வயது மகள் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியாகி அருகில் உள்ள சின்னசேலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Advertisment

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு இறந்து கிடந்த அன்னபூரணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மேற்கொண்டு உயிரிழந்த அன்னபூரணியின் கணவர் ராமசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kallakurichi woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe