Advertisment

காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தாய் மூன்று குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி!

வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகேயுள்ள சொரக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான விவசாயி ஜெயகுமார். இவரது மனைவி அமிர்தசெல்வி. அதே கிராமத்தில் ஜெயகுமாரின் சகோதரர்கள் 43 வயதான ராமச்சந்திரன், 40 வயதான பாண்டியன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

Advertisment

இவர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக சகோதரர்களுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயகுமார் அவரது மனைவி அமிர்தசெல்வியை ராமச்சந்திரன் அவரின் மனைவி ஜெயபிரியா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் தாக்கினார்கள். இதில் அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளனர்.

Advertisment

sucide

அதன்பின்னர் மூன்று மாதத்துக்கு முன்புஜெயபிரியாவின் தந்தை சாமுடி, ஜெயகுமாரின் குழந்தைகள் அஸ்வினி(வயது 10), பொற்செல்வி(வயது 12), காவியா(வயது 7) ஆகிய மூன்று பேருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். சாப்பிட்ட குழந்தைகள் அதில் விஷம் இருந்தது தொடர்பாக பெற்றோரிடம் கூறிய தகவலின் பேரில் உடனடியாக மூன்று குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதுகுறித்து திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்து மூன்று மாதங்களாகியும் சாமுடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை போலிஸார்.

இந்நிலையில் ஜெயகுமாரின் சகோதரர்கள் ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் 31ந்தேதி இரவு 10 க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜெயகுமாரின் வீட்டிற்கு சென்று ஜெயகுமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜெயகுமார் படுகாயம் அடைந்து வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரின் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுப்பற்றி புகார் கூறியும் போலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

sucide

இது தொடர்பாக இன்று ஆகஸ்ட் 1 ந்தேதி அமிர்தசெல்வி நியாயம் கிடைக்கவில்லையென அவரின் மூன்று குழந்தைகளுடன் திம்மாம்பேட்டை காவல் நிலையம் முன்பாக வந்து மண்ணெண்ணய்யை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்கள். இதை பார்த்துவிட்டு அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விரைந்து வந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவர்களை மீட்டு காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி ஆகியோர்விசாரணை மேற்கொண்டு வருகின்றார். காவல்துறையை கண்டித்து காவல்நிலையம் முன்பே தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sucide Action police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe