Advertisment

கைக்குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்!

infant passed and Mother who tried to commit suicide

Advertisment

திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (21).கணவனை இழந்த நிஷா, கடந்த ஓராண்டு காலமாக தனது பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். இவருக்கு இளவேனில் நிலவன் (2) என்ற குழந்தையும் உள்ளது. நிஷா, தன் கணவர் கார்த்திக் மறைந்து ஓராண்டு நிறைவுபெற்ற நாளை (ஜூலை 25) நினைத்து சோகமாகஇருந்துள்ளார்.

நிஷாவின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், தனது மகனைக் கொன்றுவிட்டு, தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டுள்ளார்.இரத்தம் கசிந்து மயங்கிக் கிடந்த நிலையில், வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியபோது, நிஷா இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவரும் நிலையில், இச்சம்பவம் குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

woman trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe